This site requires JavaScript to function correctly, you currently have it switched off. Learn how to switch JavaScript on.

சத்தியத்திற்காகச் சாகத் துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும், சுதந்திர சிற்பிகள், எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள்.

-தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்-

அன்பிற்குரிய தமிழின உறவுகளே!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிர் தந்த வரலாற்று நாயகர்களை,மாவீரச்செல்வங்களை எம் நெஞ்சங்களில் இருத்தி வழிபட்டு வருகின்றோம். எம் இனத்தின் விடுதலைப்பாதையிலே தடை நீக்கிகளாக விடுதலையின் வேர்களாக,எமக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருக்கின்ற மானமறவர்களின் வீர வரலாறு செம்மையாகச் செதுக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியது எம் வரலாற்றுக் கடமையாகும்.

இவ் வரலாற்றுப் பயணத்தில் மாவீரர்களின் வரலாறுகளைத் தொகுத்து மாவீரர்பெட்டகமாகப் படிப்படியாக வெளியிடும் பணியை 2018ம் ஆண்டு மாவீரர் நாளிலிருந்து ஆரம்பித்துள்ளோம்.அம் மாவீரர் பெட்டகத்தில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் இருப்பின் அவற்றினைச் சீர்செய்து இவ்விணையத்தில் நீங்கள் பதிவேற்றம் செய்யும்பட்சத்தில் அவை சரியான மாவீரர் விபரங்களாக வெளிவருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

எனவே மாவீரர்களின் வீர வரலாற்றுப் பணியின் உறுதியான வழித்தடத்தில் 1982ம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதியில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களின் விபரங்களைத் திரட்டும் நோக்கோடு இவ்(www.maveerarpeddakam.com) இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளோம். இம்மாவீரர் விபரங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மாவீரர்களாக அறிவிக்கப்பட்டவர்களும், இது வரை மாவீரர் பட்டியலில் இணைக்கப்படாதவர்களும்,இதுவரை தொடர்பிழந்து இருப்பவர்களும் என வகைப்படுத்தியுள்ளோம்.எனவே இவ்வகைப்படுத்தலுக்கமைய மாவீரர் விபரங்களைப் பதிவேற்றம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மாவீரர் பணிமனை,
அனைத்துலகத்தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப்புலிகள்.

Resources